சி பி ஐ எம் எல் கட்சியினர் வக்பு வாரிய சட்ட திருத்த எதிர்ப்பு போராட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டியும், நீட் விலக்கு தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும் மயிலாடுதுறையில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் மற்றும் சிபிஐ-எம்எல் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்;

Update: 2025-04-06 15:06 GMT
  • whatsapp icon
மத்திய அரசு வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், நீட் விலக்கு தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் மற்றும் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி (சிபிஐ-எம்எல்) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு கட்சியின் மாவட்ட செயலாளர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர் பாலசுந்தரம், அகில இந்திய முற்போக்குக்கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Similar News