அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் பட்டாபிஷேக விழா 

கன்னியாகுமரி;

Update: 2025-04-07 03:28 GMT
சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் கடந்த மாதம் 21-ம் தேதி முதல் 17 நாட்கள்திருஏடுவாசிப்பு திருவிழா நடந்து வந்தது. தினமும் மாலை  அய்யாவுக்கு பணி விடையும் திருஏடு வாசிப்பும், பாராயணம் நடைபெற்று வந்தது. 17 ஆம் நாளான  நேற்று பட்டாபிஷேக விழா நடந்தது.       விழாவுக்கு குருமகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார். பேராசிரியர் ஆர். தர்மரஜினி முன்னிலை வகித்தார். திரு ஏட்டினை  சிவசாமி, பூமணி, ஆண்டாள், தங்கேஸ்வரி ,சரஸ்வதி ஆகியோர் வாசித்தனர். நாஞ்சில் ஜீவா பாராயணம் உரை ஆற்றினார். தொடர்ந்து இரவு தர்மங்களும் சிறப்பு நிகழ்வுகளும் நடந்தன. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

Similar News