இன்ஜினியரிங் மாணவர் தூக்கு போட்டு தற்கொலை

மார்த்தாண்டம்;

Update: 2025-04-07 03:55 GMT
பளுகல் அருகே தேவிகோடு பகுதியை சேர்ந்தவர் அசோக் குமார் மகன் சூரஜ் (22). இவர் நாகர்கோவில் உள்ள ஒரு கல்லூரி ஒன்றில் பி இ  நான்காம் ஆண்டு படித்து வந்தார். சூரஜ் வைத்திருந்த ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான  செல்போனை மாற்றி விட்டு புதிதாக செல்போன் எடுக்க  திருவனந்தபுரத்திற்கு சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு வந்த போது செல்போன் எங்கே என்று பெற்றோர்கள் கேட்டனர். நாளை கிடைக்க வேண்டும் கூறிவிட்டு தனது அறைக்கு சென்றார்.        இந்த நிலையில் நேற்று  காலையில் நீண்ட நேரம் ஆகியும் சூரஜ் அறையின் கதவு திறக்கவில்லை. இதையடுத்து பெற்றோர் பலமுறை அழைத்துப் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சூராஜ் மின்விசிறியில் தூக்கில் தொங்கினார்.       இது பளுகல் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, சூரஜ்  உடலை பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி  ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இன்று பிரேத பரிசோதனை நடந்தது.  இது குறித்த புகாரின்  பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Similar News