பாத்திபபுரம் :இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் 

பார்த்தசாரதி கோவில் முன்பு;

Update: 2025-04-07 06:03 GMT
குமரியில் சரித்திர பிரசித்தி பெற்ற பார்த்திவபுரம் பார்த்தசாரதி கோயில் உள்ளது.  இந்து அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் ஆராய்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் பக்தர்களால் கொண்டு வரப்படும் நேர்ச்சை பொருட்கள், வழிபாடுகள் மற்றும் விஷேச நாட்களில் பக்தர்களால் ஏற்பாடு செய்யப்படும் பூஜை மற்றும் தோரணங்களுக்கு அனுமதி மறுக்கும் செயல் நடப்பதாக புகார் உள்ளது.       மேலும் கடந்த நவம்பர் மாதம் 13ஆம் தேதி ஆலயத்தில் இரு துறைகளின்  அஜாக்கிரதையால் பிரசித்தி பெற்ற ஐம்பொன் சிலை திருட்டு போனது. அந்த சிலைகளை மீண்ட பின்பும் ஆலயத்துக்கு கொண்டு வராமல் காலம் கடத்துவதை நிறுத்தி, உடனடியாக சிவேலி விக்ரகத்தை ஆலயத்தில் கொண்டு வந்து சிவேலி பூஜையை தொடர்ந்து நடத்திட கேட்டும், ஆலய வளாகத்தில் இருந்து அருள் பாலித்துக் கொண்டிருந்த கலைநயமிக்க ஆம்பாடி கிருஷ்ணர் விக்கிரகத்தை தொல்லியல் துறையினர் தாந்திரீக முறைக்கு முரணாக ஒன்பது ஆண்டுகளுக்கு முன் பெயர்த்து  எடுத்து விட்டு ஆலயத்தை அடைத்து வைத்துள்ளனர். உடனடியாக ஆலயத்தில் ஆம்பாடி கிருஷ்ணசுவாமியை பிரதிஷ்டை செய்து ஆலய பக்தர்களுக்கு வழிபட ஆலயத்தை திறந்த விட கேட்டும்,        ஆலயத்தில் கும்பாபிஷேகத்தை உடனடியாக நடத்த கேட்டும் முஞ்சிறை ஒன்றிய இந்து முன்னணி சார்பில் தலைவர் செல்வநாயகம் தலைமையில் பார்த்திவபுரம் பார்த்தசாரதி கோயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது. ஒன்றிய பொதுச் செயலாளர் குமாரதாஸ் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் ஜெயராம், மாவட்ட செயலாளர் சுரேஷ் குமார், நெல்லை கோட்டச் செயலாளர் கண்ணன், மத்திய அரசு வழக்கறிஞர் குற்றாலநாதன், இந்து முன்னணிமாநில பொதுச் செயலாளர் அரசு ராஜா ஆகியோர் பேசினார்கள்.       கூட்டத்தில் முன்னாள் குமரி மாவட்ட விசுவ இந்து பரிசத் தலைவர் குமரேச தாஸ், மேற்கு மாவட்ட பாஜ தலைவர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News