மாணவிகளை தாக்கிய மாணவன் மீது வழக்கு

நித்திரவிளை;

Update: 2025-04-07 06:24 GMT
குமரி மாவட்டம் வள்ளவிளை பகுதியை சேர்ந்தவர் பிபின்சி (20). வீட்டின் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு ஆங்கில பாடப்பிரிவு படித்து வருகிறார். கடந்த 3ஆம் தேதி வகுப்பறையில் உடன்படிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் படிக்கும் போது தவறாக படிக்கிறாய்  என்று கூறியுள்ளார்.       உடனே உடன்படிக்கும் மாணவன் ஒருவன் பிபின்சியை  தகாத வார்த்தைகள் பேசியுள்ளார். பின்னர் மதியம் சாப்பிட வெளியே வந்த போது மீண்டும் அந்த மாணவன் பிபின்சியை பார்த்து தகாத வார்த்தைகள் பேசி காலால் மிதித்து உள்ளார்.       இதை தடுக்க வந்த உடன்படிக்கும்  மாணவிகள் லிபோனா, ரோஸ்லின் ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். காயமடைந்த இரண்டு மாணவிகளும் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பான புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து, குழிவிளை பகுதி சேர்ந்த எட்வின் ஜோஸ் (22) என்ற மாணவன் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Similar News