கன்னியாகுமரி அருகே மயிலாடியை சார்ந்தவர் ஏஞ்சலின் சுசிலா (50) இவர் கட்டிட சித்தாள் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் சுஜித் (32) என்பவரை தனது இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர வைத்து சுசீந்திரம் அருகே உள்ள பைபாஸ் சாலை பகுதியில் உள்ள ராகவேந்திரா கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க இன்டிகேட்டர் விளக்கை போட்டுவிட்டு நிற்கும் போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த பெரியவிளை பகுதியைச் சார்ந்த அகிலன் (46) என்பவர் ஏஞ்சலின் சுசிலா வண்டியில் மோதி உள்ளார். இதில் மூன்று பேரும் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதில் அகிலன் மேல்சிகிட்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தார். சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சுசிந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.