சிங்கம்புணரி அருகே மீன்பிடி திருவிழா

சிங்கப்புணரி அருகே ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக மீன்பிடி திருவிழா;

Update: 2025-04-07 07:14 GMT
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே வேங்கைபட்டி கிராமத்தில், பெரியண்ணன் கண்மாயில் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. 30 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரியண்ணன் கண்மாயில் விவசாய தேவைக்கு நீரை பயன்படுத்தியதாலும், கோடை வெப்பத்தாலும் தண்ணீர் வற்றத் துவங்கியது. இதனால் கண்மாயில் உள்ள மீன்களை பிடிக்க ஆயக்கட்டுதாரர்கள் ஒன்று கூடி முடிவு செய்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு மீன்பிடி திருவிழா நடைபெற உள்ளதாக அறிவிப்பு செய்தனர். இதனை தொடர்ந்து வேங்கைபட்டி, பிரான்மலை, சிங்கம்புணரி, மணப்பட்டி, சிவபுரிபட்டி, அணைக்கரைப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வருகை தந்து கண்மாய் கரையை சுற்றி ஊத்தா கூடை, கச்சா, கொசுவலை உள்ளிட்ட உபகரணங்களை வைத்து கொண்டு தயாராக நின்றனர். பாரம்பரிய முறைப்படி ஆயகட்டுதாரர்கள் மடையில் கூடி ஒன்றாக சாமி கும்பிட்டு வெள்ளை துண்டு வீசி, மீன்பிடிக்க சிக்னல் கொடுத்தவுடன் மின்னல் வேகத்தில் கண்மாயில் இறங்கி தாங்கள் கொண்டு வந்த உபகரணங்களை கொண்டு விரால், கெண்டை, ஜிலேபி உள்ளிட்ட நாட்டு வகை மீன்களை கிலோ கணக்கில் பிடித்தனர்

Similar News