அ.தி.மு.க சார்பில் நீர், மோர் பந்தல்

தளவாய் சுந்தரம் திறந்தார்;

Update: 2025-04-07 07:29 GMT
நாகர்கோவில் மாநகராட்சி 41-வது வார்டுக்குட்பட்ட வட்டவிளை சந்திப்பு பகுதியில் குமரி கிழக்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் சுகுமாரன் ஏற்பாட்டிலும், 6-வது வார்டுக்குட்பட்ட பள்ளிவிளை வெட்டுர்ணிமடம் ஜங்சன் பகுதியில் குமரி கிழக்கு மாவட்ட இலக்கிய அணி தலைவர் பகவத்சிங் ஏற்பாட்டிலும் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.        கோடை காலத்தில் மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர், மோர் பந்தல்களை திறந்து மக்கள் பயனடைவதற்கு அ.தி.மு.க சார்பில் நீர், மோர் பந்தல்கள் திறக்கப்பட்டுள்ளது.  நீர், மோர் பந்தலில் அன்னாசி பழம், வாழைப்பழம், தர்பூசணி, மோர், ஜுஸ், வெள்ளரி மற்றும் பல்வேறு பழ வகைகள் இடம் பெற்றிருந்தன.      இந்நிகழ்ச்சிகளில் கழக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் நரசிங்கமூர்த்தி, கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் ராஜன், கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் சந்துரு, கழக மகளிர் அணி துணைச் செயலாளர் ராணி, குமரி கிழக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் சேவியர்மனோகரன், குமரி கிழக்கு மாவட்ட கழக இணைச் செயலாளர் சாந்தினிபகவதியப்பன், 25-வது வார்டு மாநகர கவுன்சிலரும், குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பசறை செயலாளருமான அக்சயாகண்ணன்,   உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News