மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்
ஆதிதிராவிடர்கள் மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்;
பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் புதிய மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைத்தல் / கொல்லைப்புற அலங்கார மீன்வளர்ப்பு நிலையம் மற்றும் சிறிய அளவிலான பயோபிளாக் மீன் வளர்ப்பு குளங்கள் அமைப்பதற்கு ஆதிதிராவிடர் பிரிவினர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 5/3, யூனியன் வங்கி மாடியில்,பெருமாள் கோவில் தெரு, சிவகங்கை என்ற முகவரியிலும் 04575-240848 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.