மயிலாடுதுறை வழியாக ராமேஸ்வரம் தாம்பரம் எக்ஸ்பிரஸ் தினசரி சேவை
ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடியால் பிரித்துவைக்கப்பட்ட ராமேஸ்வரம் தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில்வே விளையாடுகிறேன் பாஜகவின் வரவேற்று ஓட்டுநருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்;
. ராமேஸ்வரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்த ரயிலுக்கு மயிலாடுதுறையில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு:- ரயில் ஓட்டுனருக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி வழி அனுப்பி வைத்தனர்:- ராமேஸ்வரத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரம் முதல் சென்னை தாம்பரம் வரை செல்லும் தினசரி ரயில் (16104) சேவையை தொடங்கி வைத்தார். இந்த ரயில், மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்கு இரவு 10:15 மணிக்கு வந்து சேர்ந்தது. மயிலாடுதுறை வந்த ரயிலுக்கு மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கே.ராஜேந்திரன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சேதுராமன் ஆகியோர் தலைமையில் பாஜகவினர் 50 க்கு மேற்பட்டோர் வரவேற்பளித்து, ஓட்டுனருக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கினர். தொடர்ந்து, யாரு விட்ட ரயிலு, மோடி விட்ட ரயிலு என உற்சாக கோஷங்களை எழுப்பி ரயிலை வழி அனுப்பி வைத்தனர்.