திமுக நீர் மோர் பந்தல் துவக்கம்
மயிலாடுதுறையில் நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் அமைப்பு:- திமுக மாவட்ட செயலாளரும், பூம்புகார் தொகுதி எம்எல்ஏவுமான நிவேதா முருகன் திறந்து வைத்தார்;
ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. 100 டிகிரி வரை கொளுத்தும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் கோடையின் வெப்பத்தை பொதுமக்கள் சமாளிக்கும் வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறைமில் உள்ள திமுக அலுவலகமான அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் நகர திமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை மாவட்ட திமுக செயலாளரும், பூம்புகார் தொகுதி எம்எல்ஏவுமான நிவேதா முருகன் திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் நீர்மோர், சர்பத், தர்பூசணி ஆகிய உடலுக்கு குளிர்ச்சியூட்டும் நீர்ச்சத்துடைய பொருட்களை பாதசாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் மயிலாடுதுறை நகராட்சி தலைவர் செல்வராஜ் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.