சுந்தரராசபுரம் சென்று கொண்டிருந்த அரசு மகளிர் இலவச பேருந்து சாலையோரம் கவுந்து நின்றதால் பயணிகள் அச்சம். இதன் அப்பகுதி பரபரப்பு காணப்பட்டது.*

சுந்தரராசபுரம் சென்று கொண்டிருந்த அரசு மகளிர் இலவச பேருந்து சாலையோரம் கவுந்து நின்றதால் பயணிகள் அச்சம். இதன் அப்பகுதி பரபரப்பு காணப்பட்டது.*;

Update: 2025-04-07 14:48 GMT
சுந்தரராசபுரம் சென்று கொண்டிருந்த அரசு மகளிர் இலவச பேருந்து சாலையோரம் கவுந்து நின்றதால் பயணிகள் அச்சம். இதன் அப்பகுதி பரபரப்பு காணப்பட்டது.*
  • whatsapp icon
ராஜபாளையம் அருகே சுந்தரராசபுரம் சென்று கொண்டிருந்த அரசு மகளிர் இலவச பேருந்து சாலையோரம் கவுந்து நின்றதால் பயணிகள் அச்சம். இதன் அப்பகுதி பரபரப்பு காணப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலிருந்து அரசு மகளிர் இலவச பேருந்து 30 பயணிகளுடன் சுந்தரராசபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து சேத்தூர் ஊரக காவல் நிலையம் அருகே ஊருக்குள் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே சாலையில் மறுபுறம் நின்று கொண்டிருந்த உரம் மூடை ஏற்றிய டிப்பர் லாரி மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுநர் இடது பக்கமாக திரும்பிய போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் வயலுக்குள் இறங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக பேருந்தை விட்டு இறங்கியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அரசு மகளிர் பேருந்து அடிக்கடி விபத்துக்குள்ளாவது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குறுகலாக உள்ள இந்த சாலையில் அடிக்கடி இதே போன்ற விபத்து ஏற்பட்டு வருவதால் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News