குடிநீரை தேக்கியவர் ராஜ ராஜ சோழன்,கரிகாலனுக்கு பிறகு எடப்பாடியார் பழனிச்சாமி அவர்கள் மட்டும்தான் என்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனை க
குடிநீரை தேக்கியவர் ராஜ ராஜ சோழன்,கரிகாலனுக்கு பிறகு எடப்பாடியார் பழனிச்சாமி அவர்கள் மட்டும்தான் என்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு..*;

தமிழகத்தில் குடிநீரை தேக்கியவர் ராஜ ராஜ சோழன்,கரிகாலனுக்கு பிறகு எடப்பாடியார் பழனிச்சாமி அவர்கள் மட்டும்தான் என்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு.. விருதுநகர் மேற்கு மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ஒன்றியம் சார்பில் வடக்கு ஒன்றிய செயலாளர் குறிஞ்சி முருகன் ஏற்பாட்டில் கிருஷ்ணன்கோவில், பிள்ளையார்நத்தம், இந்திராநகர், திருவண்ணாமலை, படிக்காசுவைத்தான்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் 32 பூத்துகளுக்கான (பாக) பூத்செயலாளர்கள் (பாக) நிர்வாகிகள் நியமனம் செய்வது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம், கள ஆய்வுப் பணிகள் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி தலைமையிலும்,கழக சிறுபான்மை நலப்பிரிவு பொருளாளரும் முன்னாள் வாரிய தலைவரும் பூத் கமிட்டி பொறுப்பாளருமான ஜான் மகேந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கழக மகளிர் அணி துணைச் செயலாளருமான சந்திரபிரபாமுத்தையா, மாவட்ட இளைஞர்கள் இளம்பெண் பாசறை செயலாளர் முத்துராஜ், ஒன்றிய கவுன்சிலர் செல்லப்பாண்டியன், வடக்கு ஒன்றிய அவை தலைவர் சக்திநடேசன், மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் திருப்பதிராஜ், முன்னாள் படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், பிள்ளையார் நத்தம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காசி என்ற கருப்பையா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தனம் என்ற கிருஷ்ணசாமி, மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவர் பெருமாள் பிச்சை, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் காமராஜ், மாவட்ட இளைஞரணி இனச் செயலாளர் ராஜேஷ்குமார், வர்த்தக அணி ஒன்றிய செயலாளர் தரணி ராமசாமி, பாட்டாகுளம் கிளைச் செயலாளர் முத்துக்குமார், மீனவர் அணி ஒன்றிய செயலாளர் ஆரோக்கியராஜ்,கொத்தங்குளம் கிளைச் செயலாளர் மாரியப்பன்,தகவல் தொழில்நுட்ப ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், திருவண்ணாமலை ரமேஷ்,முருகன், அலெக்ஸ் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.. வருகின்ற 2026 தேர்தலில் எம்ஜிஆரின் ஆட்சி அம்மாவின் ஆட்சி எடப்பாடியாரின் ஆட்சி அமையும் அந்த நேரத்தில் வேலை வாய்ப்புகள், பொதுமக்களுக்கு அனைத்து வசதிகள், தொகுப்பு வீடுகள் தரப்படும். கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் பழனிச்சாமி அவர்கள் அற்புதமான கருத்துக்களை சொல்லி வருகிறார் அற்புதமான பணிகளை செய்து வருகிறார்.எடப்பாடியார் அண்ணா திமுக ஆட்சி இருந்த காலத்தில் எண்ணற்ற திட்டங்களை குட் கிராமங்களில் சீர்படுத்தி செயல்படுத்தி தந்தார். தமிழகத்தில் குடிநீரை தேக்கியவர் ராஜ ராஜ சோழன், கரிகாலனுக்கு பிறகு எடப்பாடியார் பழனிச்சாமி அவர்கள் மட்டும்தான் குடிநீரை தேக்க எண்ணற்ற பணிகளை செய்தார். கண்மாய்கள்,வரத்து கால்வாய்களை சரி செய்த பெருமையை பெற்றவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். தமிழகத்தில் கன்னியாகுமரியில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை உள்ள வாக்காளர்கள் நினைக்கின்ற வரைக்கும் சிறப்பான அற்புதமான ஆட்சியை கொடுத்திருக்கிறார் எடப்பாடியார்..வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தல் திமுகவிற்கு சம்பட்டி அடி கொடுக்கின்ற தேர்தலாக இருக்கும். பொதுமக்களுக்கு அதிமுகவாகிய நாங்கள் ரத்தத்தை சிந்தி உறுதுணையாக இருப்போம் என முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.