ராமர் பஜனை கோயிலில் ராம நவமி விழா!
ஸ்ரீ ராமர் பஜனை கோயிலில் 5வது ஆண்டு ஸ்ரீ ராம நவமி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.;

வேலூர் சின்ன அல்லாபுரம் செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ ராமர் பஜனை கோயிலில் 5வது ஆண்டு ஸ்ரீ ராம நவமி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் ஸ்ரீ ராமர் சீதாதேவி, லக்ஷ்மணர், ஆஞ்சநேயர் ஆகியோரின் பஞ்சலோக சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது .பின்னர் சாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.