மனைவியை அடித்துக்கொன்றவருக்கு ஆயுள்தண்டனை
மயிலாடுதுறை அருகே மனைவியை அடித்துக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை:- மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிபதி தீர்ப்பு;

:- மயிலாடுதுறையை அடுத்த வேப்பங்குளத்தை சேர்ந்த ராஜபாண்டியன். இவரது மனைவி தஞ்சையை சேர்ந்த கோடீஸ்வரி. கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டுக்கு சென்றிருந்த கோடீஸ்வரியை 2019 ஆம் ஆண்டு அழைத்து வந்து குடும்பம் நடத்தியுள்ளார். இந்நிலையில், 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி ஏற்பட்ட சண்டையில் ராஜபாண்டியன் கோடீஸ்வரியின் தலையை சுவற்றில் மோதியதில், அவர் படுகாயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மயிலாடுதுறை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது . முடிவில் ராஜபாண்டியனை குற்றவாளி என மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகுமாரி அளித்தார். ,அவருக்கு ஆயுள் சிறை, தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதமும், விதித்தார்.