சமூக மாற்றத்திற்கு அடித்தளம் மகளிர் சக்தியே
மயிலாடுதுறையில் மகளிர் சக்தி என்ற கருத்தில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில் காமராஜரின் பேத்தி மயூரி கண்ணன் பங்கேற்பு திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்;
மயிலாடுதுறை லட்சுமிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில், பெண்கள் முன்னேற்றத்துக்கும், சமூக மாற்றத்துக்கும் வலிமையான அடித்தளம் மகளிர் சக்தி என்ற கருத்தில் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பெருந்தலைவர் காமராஜரின் பேத்தி டி எஸ் கே மயூரி கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு, சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பேசினார். மேலும் பெண்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் பெண் தலைவர்களின் சாதனைகள் குறித்தும் விரிவாக பேசினார். இந்த நிகழ்ச்சியில் திரை பிரபலம் ஜீவாரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கம் வழங்கி பேசினார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.