சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றியம் திமுக சார்பில் முதலமைச்சர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்.
சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றிய செயலாளர் P. மனோகரன் வரவேற்புரை வழங்கினார்.;
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த தச்சம்பாடி முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன் திடலில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றியம் திமுக சார்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவரும், போளூர் சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளருமான டாக்டர் எ.வ.வே.கம்பன் தலைமை வகித்து திமுக ஆட்சியின் சிறப்புகளும், மக்களுக்கு தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து பேசினார். முன்னதாக சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றிய செயலாளர் P. மனோகரன் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஆரணி பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட திமுக செயலாளருமான எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். மேலும் தலைமைக் கழக பேச்சாளர்கள் சூர்யா வெற்றி கொண்டான் மற்றும் ஆம்பூர் தர்மன் ஆகியோர் திமுக ஆட்சியின் நலத்திட்டங்கள் மற்றும் திமுக ஆட்சி வரலாறுகள் குறித்து பேசினர். தருமபாலன், ராஜசிம்மன், மகாதேவன், தேவகி பெருமாள், நரசிம்மன், வேதாந்தம், மகேஷ், தமிழ் குடிமகன், கார்த்திகேயன், தமிழ் கொண்டான், முருகையன், நாராயணன், அரிகிருஷ்ணன், தரணிவேந்தன், இளங்கோ, ஜீனத்குமார், அமலாதாஸ், முனியன், சகாயராஜ், ஆறுமுகம், சிவா, சசிகலா சரவணன், சேவியர், விஜயன், ராமு, பிரான்சிஸ் ஆகியோர் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வின் போது உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜசேகர், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.வி.ராஜ்குமார், போளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.வி சேகரன், மாவட்ட துணை செயலாளர் பாண்டுரங்கன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் எதிரொலி மணியன், மாவட்ட துணை செயலாளர் லோகநாதன், மாவட்ட துணை செயலாளர் ஜெயராணி ரவி, மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் காசி, பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நரேஷ், குமார், செல்வராஜன், மணிகண்டன், அன்பழகன், குமார், மதியழகன், கார்த்திகேயன், பார்த்திபன், சாது ஆனந்த், மாலினி வினோத் திவாகர், மதிவாணன், ராணி அர்ஜுனன், ராணி சண்முகம், இந்திரா இளங்கோவன், பழனி, சுதா முருகன், திலகவதி செல்வராஜன், லட்சுமி லலிதாவேலன், சுந்தரம், அண்ணாதுரை, ராம்மோகன், கலாம் பாட்ஷா, சுரேஷ்பாபு, மணி பாரதி, சுரேந்தர், சபீர் பாஷா, சரவணன், நடராஜன், மணிமாறன், செல்வம், அம்பிகா, குப்புசாமி, சிட்டிபாபு, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இறுதியாக ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் அன்பரசு நன்றி உரை நிகழ்த்தினார்.