
குமரி மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் தெற்கு மண்டல தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைப்பெற்றது. திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்து ஆலோசனை வழங்கியது நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக அமைந்தது. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தியுள்ள கட்சியின் புதிய கட்டமைப்புகள் குறித்த செயல்திட்டங்கள் நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டு புதிய நிர்வாக பொறுப்புகள் மற்றும் கிளை கட்டமைப்பின் அடிப்படை செயல் திட்டங்கள் முறையே பகிர்ந்து வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாவட்ட தலைவர் தீபக் சாலமன், மாவட்ட செயலாளர் மைக்கேல் எடில்பெர்ட்,2026 சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் மரிய ஜெனிபர் ஆகியோர் அடுத்த நாட்களுக்கான செயல் திட்ட ஆலோசனைகள் மற்றும் அடிப்படை நிர்வாக செழுமைப்படுத்துதல் குறித்த கருத்துக்களை பரிமாறி கொண்டனர். இதில் கன்னியாகுமரி தெற்கு தொகுதி தலைவர் சேதுபதி உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்