ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு போராட்டம்

கன்னியாகுமரி;

Update: 2025-04-08 04:25 GMT
ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு போராட்டம்
  • whatsapp icon
கன்னியாகுமரி அருகே தெள்ளாந்தி ஊராட்சியில் கடந்த 2023-ஆம் வருடம் குடிநீர் விநியோகிப்பாளராக செயல்பட்டு வந்த கண்ணன்  வேலையை வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றார். அவருக்கு பதிலாக 2023 மே மாதம் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கணேசன் என்பவர் குடிநீர் விநியோகிப்பாளராக தேர்வு செய்யப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுக்கு மேலாக பணி செய்து வருகிறார்.      இந்த நிலையில் தற்போது  வேலையை விட்டு சென்ற கண்ணன் மீண்டும் வந்து எந்த ஒரு பணியும் செய்யாமல் கடந்த சில தினங்களாக அரசு வருகை பதிவேட்டில்  கையொப்பமிட்டு வருகிறார். இது ஊராட்சியின் நிதியை சுரண்டுவதற்கு திட்டமிடுவதாகும். இந்த தகவல் தெரிந்து அதிகாரிகளுக்கு புகார் கொடுத்து இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.    பொதுமக்கள்  தற்போது பணி செய்யும் கணேசன் என்பவரை மாற்றக்கூடாது என தெரிவித்த போது ஊராட்சி செயலர் அவனை மாற்றியே தீர்வேன் என கூறியுள்ளார்.  எனவே  சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் ஊராட்சி செயலர்  மீதும் சட்டத்திற்கு புறம்பாக பணியே செய்யாமல் அரசு வருகை பதிவேட்டில் கையொப்பமிடும் கண்ணன் என்பவர் மீதும் நடவடிக்கை எடுப்பதோடு பொதுமக்களுக்கு குடிநீர் தங்குதடை இன்றி கிடைப்பதை உறுதிபடுத்தவும், நீதி விசாரணைக்கு வலியுறுத்தி  ஊராட்சி மன்றம் முன்பு நேற்று முதல் கட்டமாக ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஊர் மக்கள் ஒன்று கூடி  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News