
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 806 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து அகஸ்தீஸ்வரம் வட்டத்தை சார்ந்த ஜாண் பிரிம்சன் என்பவர் பணியில் இருந்தபோது கடந்த 14.07.2024 அன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்ததற்காக அன்னாரது மனைவி நீத்து பிரிம்சன்-க்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 5.2.50 இலட்சத்திற்கான காசோலையினையினையும், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் முன்னாள் படைவீரர்களின் மனைவியரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் மின்மோட்டர் பொருத்தப்பட்ட இலவச தையல் இயந்திரம் 3 பயனாளிகளுக்கும், மாநில சட்டத்துணவு திட்டத்தின் கீழ் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆசாரிப்பள்ளம் புனித மிக்கேல் தொடக்கப்பள்ளி சத்துணவு மையத்தில் சமையலராக பணிபுரிந்து கடந்த 16.12.2023 அன்று பணியின் போது காலமான அருள் பாத்திமா என்பவரது மகள் ஆன்சி பவுலின் என்பவருக்கு கோட்டார் புனித சேவியர் உயர்நிலைப்பள்ளி சத்துணவு மையத்தில் சத்துணவு அமைப்பாளராக கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினையும் வழங்கினார்.