மாடியில் இருந்து விழுந்த வாலிபர் உயிரிழப்பு

குலசேகரம்;

Update: 2025-04-08 05:40 GMT
குலசேகரம் பகுதியை சேர்ந்தவர் சிட்னிசான் மோரிஸ் (58). சிவில் இன்ஜினியரான இவர் சர்வதேச பள்ளிக்கூடம் ஒன்றை  நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் பெரிசான் மோரிஸ் (26)கடந்த சில ஆண்டுகளாக மன நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிகிறது.       இந்த நிலையில் நேற்று கோயிலுக்கு செல்ல சிட்னிசான் மோரிஸ் மகனை தேடினார். ஆனால் அவரை காணவில்லை. பின்னர் அவர் தான் நடத்திவரும் பள்ளிக்கூடத்திற்கு மனைவி மற்றும் மகனுடன் சென்று தேடி உள்ளார்.      அப்போது பள்ளி மைதானத்தில் உள்ள கட்டிடத்தின் மாடியிலிருந்து பெரிசான் மோரிஸ் மைதானத்தில் விழுந்து கிடந்ததை கண்டுள்ளார். பலத்த காயமடைந்து உயிருக்காக போராடியவரை மீட்டு மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி செய்து, பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.       அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சிட்னிசான் மோரிஸ் குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News