அங்கன்வாடி மையத்தினை பார்வையிட வந்த மாவட்ட ஆட்சியர்
அங்கன்வாடி மையத்தினை பார்வையிட வந்த மாவட்ட ஆட்சியர் திடீரென அங்கன்வாடி மையம் அமைந்திருக்கும் வளாகத்திற்கு செயல்பட்டு வரும் தொடக்கப் பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் மாணவராக அமர்ந்து மதிய உணவு உண்டு ஆய்வு மேற்கொண்டார்;

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்றல் நகர் பகுதியில் ஏசி வசதியுடன் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தினை பார்வையிட வந்த மாவட்ட ஆட்சியர் திடீரென அங்கன்வாடி மையம் அமைந்திருக்கும் வளாகத்திற்கு செயல்பட்டு வரும் தொடக்கப் பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் மாணவராக அமர்ந்து மதிய உணவு உண்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்நிகழ்வானது அப் பகுதி பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவ மாணவியர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி புதிய யூனியன் அலுவலகம் கட்டிடம் தனியார் தொழில்நுட்ப கல்லூரி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் இறுதியாக ராஜபாளையம் மேல பாட்ட கரிசல்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்றல் நகர் பகுதியில் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் ஏசி வசதியுடன் நவீன முறையில் மறு சீரமைப்பு செய்யப்பட்ட அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டார். ஊராட்சி ஒன்றிய தமிழ் மற்றும் ஆங்கில வழி தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் அமைந்திருந்த அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் வளாகத்திற்குள் இருந்த தொடக்கப் பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மதிய உணவு இடைவேளை நேரம் என்பதனால் தொடக்கப்பள்ளி மாணவ மாணவியர்கள் தமிழக அரசின் மதிய உணவு திட்டத்தின் கீழ் சத்துணவில் உணவு வாங்கி அருந்திக் கொண்டிருந்த நிலையில் . அப்பகுதி சென்ற மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் காலை மற்றும் மதிய நேரங்களில் அரசு சார்பில் வழங்கப்படும் உணவு தரமானதாக உள்ளதா என குழந்தைகளிடம் கேட்டு அறிந்து. பின்பு யாரும் எதிர்பாராத நேரத்தில் மாணவர்களுடன் மாணவராக அமர்ந்து சத்துணவை சாப்பிட்டுஆய்வு மேற்கொண்டார். தரமான உணவு வழங்கப்படுவதை மாணவருடன் மாணவராக உணவருந்தி ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் உணவு தயார் செய்த சத்துணவு ஊழியர்களை பாராட்டினார். மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொள்ள வந்திருப்பதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் திடீரென மதிய உணவை உண்டு ஆய்வு செய்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்தது மட்டுமின்றி அவர்கள் பகுதிக்கு தேவையான வசதிகளை செய்து தரக் கோரி மனு அளித்தனர். ஆய்வு மேற்கொள்ள வந்த மாவட்ட ஆட்சியர் மாணவர்களோடு மாணவர்களாக அமர்ந்து மதிய உணவு அருந்தி ஆய்வு செய்தது பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.