காந்தி நகரில் காட்டுக்குள் இருந்து வழி தவறி குடியிருப்பு பகுதியில் புகுந்த நரியை வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பாக அமைத்து கொண்டு சென்று வனப்பகுதியில் விட்டனர்*

காந்தி நகரில் காட்டுக்குள் இருந்து வழி தவறி குடியிருப்பு பகுதியில் புகுந்த நரியை வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பாக அமைத்து கொண்டு சென்று வனப்பகுதியில் விட்டனர்*;

Update: 2025-04-08 14:19 GMT
அருப்புக்கோட்டை அருகே காந்தி நகரில் காட்டுக்குள் இருந்து வழி தவறி குடியிருப்பு பகுதியில் புகுந்த நரியை வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பாக அமைத்து கொண்டு சென்று வனப்பகுதியில் விட்டனர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சுற்று வட்டார பகுதியில் உள்ள சமூக வன காடுகளில் மான்கள், நரிகள், காட்டு பன்றிகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு அருப்புக்கோட்டை அருகே காந்திநகர் பகுதியில் காட்டுப்பகுதியில் இருந்து வழி தவறிய நரி ஒன்று வழி மாறி குடியிருப்பு பகுதியில் புகுந்தது. அங்கும் இங்கும் சுற்றித்திரிந்த நரி பொதுமக்களை பார்த்தவுடன் ஒரு வீட்டின் சந்து பகுதியில் சென்று மறைந்து கொண்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காந்திநகர் பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் வழி தவறி வந்த நரியை பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதியில் கொண்டு சென்றுவிட்டனர். குடியிருப்பு பகுதியில் நரி புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

Similar News