போக்குவரத்து காவலர்களுக்கு நீர் மோர் வழங்கும் விழா

கோடை காலத்தை முன்னிட்டு சாலைகளில் பணிபுரியும் போலீசாருக்கு நீர் மோர் வழங்கும் விழா தர்மபுரி 4 ரோட்டில் எஸ் பி தொடங்கி வைத்தார்;

Update: 2025-04-09 01:49 GMT
  • whatsapp icon
கோடை காலத்தை முன்னிட்டு சாலைகளில் பணிபுரியும் போலீசாருக்கு நீர் மோர் வழங்கும் விழா தர்மபுரி நேற்று மாலை 4 ரோட்டில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் தலைமை தாங்கினார். துணை போலீஸ் போலீஸ் சூப்பிரண்டு சிவராமன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டவுன் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் கலந்து கொண்டு போக்குவரத்து போலீசார், டவுன் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு நீர்மோர், தர்பூசணி, இளநீர் மற்றும் குளிர்பானங்களை வழங்கினார். மேலும் பஸ் நிறுத்தத்தில் இருந்த பொது மக்களுக்கும் அவர் நீர்மோர் வழங்கினார். விழாவில் போலீஸ் சூப்பிரண்டு பேசுவையில், கோடை காலங்களில் சாலைகளில் பணிபுரியும் போக்குவரத்து போலீசார், சட்ட ஒழுங்கு போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு சென்னை காவல்துறை தலைமை இயக்குனர் அறிவுறுத்தலின்படி நீர்மோர், தர்பூசணி உள்ளிட்ட பழங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அவர்கள் சோர்வடையாமல் பணிபுரிவார்கள். மாவட்டம் முழுவதும் கோடை வெயிலில் பணிபுரியும் போலீசாருக்கு நீர்மோர் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் கடந்தாண்டை விட இந்த ஆண்டு சாலை விபத்துக்கள் குறைந்துள்ளன. மாவட்டத்தில் ஏற்கனவே 2 தேசிய நெடுஞ்சாலைகள் இருந்த நிலையில் தற்போது கூடுதலாக ஒரு தேசிய நெடுஞ்சாலை வந்துள்ளது. இதனால் போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சாலை விதிகளை முறையாக பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும். போலீசாரின் அறிவுரைகளை ஏற்று மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோமதி, சிறப்பு இன்ஸ்பெக்டர் ரகு. ரகுநாதன் மற்றும் போலீசார், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News