மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
கடம்பூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி;

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கோட்டம் மலம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (53). திங்களூர் பஞ்சாயத்தில் மக்கள் நல பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். 3-வது மகன் யாதவ கிருஷ்ணன் 12-ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று யாதவ கிருஷ்ணன் வீட்டில் உள்ள குளியலறைக்கு லைட் போடுவதற்காக சமையல் அறையில் இருந்த ஸ்விட்ச் பாக்ஸ் ஒயரை சொருகிய போது திடீரென யாதவ கிருஷ்ணா மீது மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய வருகின்றனர்.