குடிபோதையில் தகராறு செய்த வாலிபர்கள் கைது
ஈரோட்டில் பரபரப்பு குடிபோதையில் அரசு பஸ் ஓட்டுனரிடம் தகராறில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது;

ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து அர்ச்சலூர் வரை சென்று மீண்டும் ஈரோடு பஸ் நிலையத்திற்கு 21ம் எண் கொண்ட அரசு பஸ் நேற்று வந்து கொண்டிருந்தது.இந்த பஸ்சை முகாசி அனுமன்பள்ளியை சேர்ந்த குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.பல் அர்ச்சலூரில் இருந்து பயணிகளுடன் ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்த போது காளைமாட்டு சிலை பகுதியில் வந்த போது சாலையை கடந்து குடிபோதையில் வந்த 2 வாலிபர்கள் பஸ் ஓட்டுநர் குமாரிடம் தகராறில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதனை கண்ட பயணிகள் 2 வாலிபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இச்சம்பவம் தொடர்பாக ஓட்டுநர் குமார் ஈரோடு சூரம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரை தொடர்ந்து அரசு ஓட்டுநரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்த போலீசார் ஈரோட்டை சேர்ந்த வினோத், ஸ்ரீதர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.