நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

தடப்பள்ளி -அரக்கன் கோட்டை பாசனத்தில் நாளை 39 நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு;

Update: 2025-04-09 04:40 GMT
நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
  • whatsapp icon
ஈரோடு மாவட்டத்தில் நடப்பு பருவத்திற்கு தடப்பள்ளி -அரக்கன் கோட்டை பாசனப்பகுதியில் நெல்லை கொள்முதல் செய்ய 39 இடங்களில் நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் நாளை முதல் திறக்கப்படுகிறது.காசிபாளையம், கள்ளிப்பட்டி, ஏளூர், நஞ்சை புளியம்பட்டி, புது வள்ளியம்பாளையம், என்.ஜி. பாளையம், மேவாணி, புதுக்கரை புதூர், சவுண்டப்பூர், நஞ்சை துறையம்பாளையம், கொண்டையம் பாளையம், டி என் பாளையம், கூகலூர், பெருந்தலையூர், கருங்கரடு ஆகிய இடங்களில் திறக்கப்படும். தேவைக்கேற்ப கூடுதல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும். நெல் கிரேடு ஏ ஆதார விலை ரூ.2, 320, ஊக்கத்தொகை 130 என குவின்டால், ரூ.2,450, நெல் பொது ரகம், ஆதார விலை 2,300 ரூபாய், ஊக்கத்தொகை 150 ரூபாய் சேர்த்து, குவிண்டால் ரூ.2, 405 கொள்முதல் செய்யப்படும். விவசாயிகளிடம் நெல்லுக்கான உரிய ஆவணங்கள் பெற்று, கைரேகை பதிவு உடன் கொள்முதல் செய்து, விவசாயி வங்கிக் கணக்கில் உரிய தொகை வரவு வைக்கப்படும். நெல் விற்பனைக்கு விஏஓ சான்று, சிட்டா அலங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோ - 2 ஆகியவை எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Similar News