மதுசூதன பெருமாள் கோவில் இன்று தேரோட்டம் 

கன்னியாகுமரி;

Update: 2025-04-09 07:31 GMT
கன்னியாகுமரி அருகே உள்ள பறக்கை மதுசூதனப்பெருமாள் திருக்கோவில் தமிழ்நாட்டில் உள்ள பழமையான கோவில்களில் ஒன்று ஆகும் இந்த கோவிலில் வருடம் தோறும் பங்குனி பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம் அதுபோல இந்த ஆண்டு பங்குனி பெருந் திருவிழாவிற்காக கடந்த 1ம் தேதி காலை 8.30 மணி அளவில் கொடி மரத்திற்கு பூஜைகள் செய்து திருக்கொடி ஏற்றப்பட்டது.  8ம்திருவிழாவான நேற்று நடராஜமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மாலை 7 மணி அளவில் நடைபெற்றது.       விழாவின் முக்கிய திருவிழாவான தேரோட்ட நிகழ்ச்சி இன்று காலை 9.15 மணிக்கு மேல் 9:45 மணிக்குள் விநாயகர் தேர் அம்பாள் தேர் பெருமாள் தேர் அலங்கரிக்கப்பட்டு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.       பத்தாம் திருவிழாவான நாளை மாலை 3 மணிக்கு மேல் சுவாமி வெள்ளி கருட வாகனத்தில் ஆராட்டுத்துறைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் இரவு 11 மணிக்கு தெப்ப திருவிழாவும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில்களின் இணை ஆணையர் பழனி குமார் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் கண்காணிப்பாளர் ஆனந்த் ஸ்ரீ காரியம் பத்மநாபன் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மதுசூதனப் பெருமாள் பக்தர்கள் பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

Similar News