தஞ்சாவூர் மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில்  சிறப்பு இ-சேவை முகாம் 

சிறப்பு இ-சேவை முகாம் ;

Update: 2025-04-10 16:35 GMT
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 3 மற்றும் 4, ஆகிய தேதிகளில், சிறப்பு உயர்கல்வி சேர்க்கை செயல்முறையை எளிதாக்கும் வகையில், பன்னிரெண்டாம் வகுப்பு மாணாக்கர்கள் உள்ள, 137 பள்ளிகளில் சிறப்பு  இ-சேவை முகாம்கள் நடைபெற்றன.  இதனால் மாணாக்கர்கள் தங்கள் பள்ளிகளிலிருந்து, வருமானம், சாதி, இருப்பிடம், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் உள்ளிட்ட  தொடர்புடைய ஆன்லைன் சான்றிதழ்களுக்கு எளிதாக விண்ணப்பிக்க, ஒவ்வொரு பள்ளியுடனும் ஒரு இ-சேவை மையத்தை இணைத்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.  இம்முகாம்களில் மொத்தம் 2,579 மாணாக்கர்கள் இந்த செயல்முறையின் மூலம் பயனடைந்துள்ளனர்" என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

Similar News