தெங்கால்:நீர் பாய்ச்ச சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி பலி

நீர் பாய்ச்ச சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி பலி;

Update: 2025-04-11 04:11 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் தெங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சேகர் (46).தனது நிலத்துக்கு நீர் பாய்ச்ச சென்றுள்ளார்.அப்போது பம்பு செட் மின் மோட்டாரை இயக்க முயன்ற போது மோட்டாரில் மின்கசிவு ஏற்பட்டு அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அவரது உறவினர்கள் சேகரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார். மேலும் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News