போலீசாரை கண்டித்து செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் பண்ணாரி மாரியம்மன் கோவில் முன்பு போலீசாரை கண்டித்து செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2025-04-11 04:16 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் குண்டம் விழாவில் செய்தியாளர்களை உள்ளே விட அனுமதி மறுத்து அநாகரீகமாக பேசிய போலீசார் பேசினர். இதைக் கண்டித்து, இன்று சத்தியமங்கலம் தாளவாடி பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் சங்க தலைவர் கோபால்சாமி தலைமையில் பண்ணாரி கோவில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் டி.எஸ்.பி. முத்தரசு, பண்ணாரி கோவில் செயல் அலுவலர் மேனகா ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செய்தியாளர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.அப்போது, நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து, இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். இதை ஏற்றுக் கொண்ட செய்தியாளர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சத்தியமங்கலம், தாளவாடியை சேர்ந்த செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News