ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி பேட்டி

உச்சநீதிமன்றம் ஆளுநர் தொடர்பான வழக்கில்மாநில அரசு எந்த வகையில் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை பார்த்து நியாயமான தீர்ப்பு வழங்கியுள்ளதுஅமைச்சர் முத்துசாமி பேட்டி;

Update: 2025-04-11 04:27 GMT
ஈரோட்டில் இன்று அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-உச்சநீதிமன்றம் ஆளுநர் தொடர்பான வழக்கில் மாநில அரசு எந்தெந்த வகையில் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்த்து தான் நியாயமான, அருமையான தீர்ப்பை கொடுத்து உள்ளது. அது தமிழ்நாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாகவும் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கும். இது தமிழக அரசு சிறந்த செயல்பாட்டுக்கு இந்த தீர்ப்பு சான்றிதழாக அமைந்துள்ளது. தெரு நாய்கள் கடித்து ஆடுகள் உயிரி இழப்புக்கு இழப்பீடாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மூலம் ஆடுகள் உயிரிழப்பு குறித்து கணக்கெடுப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.தமிழக அரசு நீட் விலக்கு போன்ற எந்த பிரச்சனை கொண்டு வந்தாலும் ஊழலை மறைக்க தான் என்றால் வீட்டில் உட்கார்ந்து விடுவதா? எய்ம்சுக்கு மத்திய அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு கொடுத்தது போல மாநில அரசுக்கு விலக்கு வேண்டும் என்று கேட்கிறோம். மத்திய அரசு எதிர்த்து போராடும் செயலில் ஈடுபடுகிறோம். ஒவ்வொரு முறையும் வலியுறுத்தி கேட்கிறோம் ஒவ்வொரு நடவடிக்கை போதும் அரசியல் என்று சொன்னால் என்ன செய்வது.2026 -ம் ஆண்டு திமுக தான் ஆட்சிக்கு வரும் என பொதுமக்கள் சொல்கிறார்கள். 200இடங்களுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும். அதில் மாறுப்பட்ட கருத்து இல்லை. அதற்கு நாடாளுமன்றம், இடைத்தேர்தல் ஆகிய தேர்தலில் மக்கள் வாக்களித்து வெற்றி பெற வைத்ததே காரணம். திமுக தமிழிலும் ஆங்கிலத்திலும் கையெழுத்து போடுகிறோம்.நீட் ரகசிய ஒன்றும் இல்லை வேண்டாம் என்று தான் சொல்கிறோம். நீட் போன்ற விவகாரத்தில் எதிர்கட்சிகள் ஒன்றாக நின்று செயல்பட வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம்.சட்டமன்றத் கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் பேச எல்லா அனுமதி கொடுக்கப்படுகிறது. எல்லாரும் பேசுவது நேரலையில் காண்பிக்கப்பட்டது. வீட்டுவசதி வாரியத் துறை கீழ் மானிய கோரிக்கை போது அறிவித்த 27அறிவிப்புகளில் அனைத்து அறிவிப்புகள் செயல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Similar News