தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜை
நிர்வாகிகள் தகவல்;
தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சேலம் குரங்குச்சாவடியில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது. இது குறித்து ஸ்ரீ ஐயப்பா ஆசிரம தலைவர் கே பி நடராஜன், செயலாளர் சண்முகம் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஐயப்பனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு பூஜைகளும், காய்கறி மற்றும் கனிகளால் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட உள்ளது. அன்றைய தினம் ஐயப்பன் சுவாமி திருப்பாதத்தில் பூஜிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயம், லட்டு பிரசாதம் மற்றும் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்படும். விழாக் காலங்களில் கோயில் நடை அதிகாலை 4 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என தெரிவித்தனர். இதில் பொருளாளர் சரவண பெருமாள், உதவி செயலாளர் சிவகுமார், சட்டைஆலோசகர் ஐயப்பன் மணி, நிர்வாகிகள் பாலசுப்ரமணியம், சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்