ராணிப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி!
மின்சாரம் தாக்கி விவசாயி பலி!;
ராணிப்பேட்டை அருகே தெங்கால் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 46). இவருக்கு பவுன் (40) என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.சேகர் டெய்லர் வேலை செய்து வந்தார். மேலும் அதே பகுதியில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக சேகர் சென்றார். அப்போது நிலத்தில் மின்சார கம்பி அறுந்து கீழே விழுந்து கிடந்ததை கவனிக்காமல் கால் வைத்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கியதில் சேகர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து அவரது உறவினர்கள், சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து உயிரிழந்த சேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவம்னைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.