சேலம் அருகே டெம்போ வாகனம் போது இளைஞர் வியாபாரி பலி
சாலையோரம் நின்ற பெண்ணும் படுகாயம்;
சேலம் சின்னசீரகாப்பாடி பகுதியில் இளநீர் வியாபாரம் செய்து வந்தவர் உதயகுமார். இவர் இன்று காலை அந்த பகுதியில் உள்ள சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சேலம் நோக்கி வந்த ஒரு டெம்போ அவர் மீது அதிவேகத்தில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் உடன் உதயகுமார் தூக்கி வீசப்பட்டார். அப்போது சாலையோரம் பஸ்ஸிற்கு காத்து நின்று கொண்டிருந்த ஒரு பெண் மீது அந்த வாகனம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் அந்த பெண்ணும், இளநீர் வியாபாரியும் படுகாயம் அடைந்தனர். இதில் உதயகுமார் சம்பவ இடத்திலேயே சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார். படுகாயம் அடைந்த பெண் உயிருக்கு போராடினார். அவரை ஆட்டையாம்பட்டி போலீசார் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்த விபத்து தொடர்பாக போலீசார் நடத்தி வருகின்றனர்.