சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க

29-ந் தேதி கடைசிநாள் கலெக்டர் தகவல்;

Update: 2025-04-12 10:23 GMT
சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 722 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கான கடைசி நாள் 29-ந் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- சேலம் மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 722 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்பட உள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், சேலம் மாநகராட்சி, ஆத்தூர் மற்றும் எடப்பாடி நகராட்சி அலுவலகங்களில் இன சுழற்சி வாரியாக தகவல் தெரிந்துகொள்ளலாம். மேலும் salem.nic.in என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நியமனம் கோரும் மையத்திற்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்பிற்கும் இடைப்பட்ட தூரம் 3 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் வருகிற 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.45 மணிவரை மட்டும் ஆகும். அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது. ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாநகராட்சி, ஆத்தூர் மற்றும் எடப்பாடி நகராட்சி அலுவலகங்கள் தவிர்த்து இதர அலுவலகங்களில் அளிக்கப்படும் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது. காரணம் ஏதும் குறிப்பிடாமல் நியமன அறிவிப்பு அறிக்கையை ரத்து செய்வதற்கும், திரும்ப பெறுவதற்கும், திருத்துவதற்கும், கெடு தேதியினை நீட்டிப்பதற்கும் மாவட்ட கலெக்டருக்கு உரிமை உண்டு. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Similar News