தூர் வாரும் பணியை மே இறுதிக்குள் முடிக்கப்படும்: அமைச்சர் கோவி. செழியன் 

அமைச்சர் பேட்டி;

Update: 2025-04-12 15:08 GMT
தூர் வாரும் பணியை மே இறுதிக்குள் முடிக்கப்படும்: அமைச்சர் கோவி. செழியன் 
  • whatsapp icon
டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் தூர் வாரும் பணி மே மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். தஞ்சாவூரில் நெடுஞ்சாலைத் துறைக் கண்காணிப்பு பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) அலுவலகத்தை சனிக்கிழமை திறந்து வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் அருகே இரு இடங்களில் தூர் வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணி மே மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு, மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதி திறப்பதற்கான நடவடிக்கையைத் தமிழக முதல்வர் மேற்கொண்டு வருகிறார். திருவையாறு புறவழிச்சாலை பணிகள் முடிக்கப்பட்டதால், விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளது. கும்பகோணம் - திருநறையூர் புறவழிச்சாலை அமைப்பது தொடர்பாக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது நெடுஞ்சாலை துறை அமைச்சர் அறிவித்தார். இதே போல இன்னும் பல கோரிக்கைகள் அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் கோவி.செழியன். இவ்விழாவில், மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம், தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச.முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, கண்காணிப்பு பொறியாளர் எம்.ஏ. ராஜதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News