அமைச்சர் பொன்முடி மீது மயிலாடுதுறை காவல்நிலத்தில் புகார்

பொன்முடியை பதவியில் இருந்து நீக்கம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க மாநில தலைவர் பண்ணை சொக்கலிங்கம்  பேட்டி:-;

Update: 2025-04-12 18:48 GMT
  • whatsapp icon
.    சைவ-வைணவர்களையும், பெண்களையும் தரக்குறைவாக விமர்சித்த அமைச்சர் பொன்முடிமீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க மாநில தலைவர் பண்ணை தி.சொக்கலிங்கம் மயிலாடுதுறை காவல் நிலையத்தில்   புகார் அளித்தார்.     பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அமைச்சர் பொன்முடி 6ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சைவத்தையும் வைணவத்தையும் கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். அந்த மேடையிலே பெண்கள் இருக்கும்போதே திருநீரையும், திருநாமத்தையும் விலைமாதர்களுடன் ஒப்பிட்டு மிகவும் அருவருக்கத்தக்க வகையில் அனைவரும் மனம் வருந்தும் அளவிற்கு பேசி, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளார். தமிழக முதல்வர் பொன்முடியை கட்சிப்பதவியில் இருந்து நீக்கிய தமிழக முதல்வர் அமைச்சர் பொறுப்பில் இருந்தும் உடனடியாக நீக்க வேண்டும்.. அவருக்கு ஆதரவாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியது கண்டனத்துக்கு உரியது என தெரிவித்தார்.

Similar News