நீட் தேர்வு மையத்தில் ஆட்சியர் ஆய்வு

செட்டிக்கரை பகுதியில் நீட் தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆட்சித்தலைவர் சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு.;

Update: 2025-04-13 00:40 GMT
  • whatsapp icon
தருமபுரி மாவட்டத்தில் 5 இடங்களில் உள்ள 8 மையங்களில்  4,800 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகள் ற்கொள்ளப்பட்டுள்ளது. கேந்திர வித்யாலயா பள்ளி மையத்தில் மட்டும் 480 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் நேற்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தடையின்றி தேர்வு எழுதுவதற்கான அடிப்படைத் தேவைகள், குடிநீர், கழிப்பறை வசதிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.  மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சாய் தளம், சக்கர நாற்காலி மற்றும் மருத்துவ முதலுதவி உபகரணங்கள் குறித்தும்  மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்.  மாணவர்கள் தேர்வு எழுதும் அறைகளில் மின் விளக்குகள், மின் விசிறிகள் மற்றும் தேர்வு எழுதம் மேசைகள் சரியான முறையில் உள்ளதா  எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கோட்டாட்சியர் காயத்ரி, தருமபுரி வட்டாட்சியர் ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News