
கறம்பக்குடி பகுதியில் அடிக்கடி பைக்திருடு போவதாக போலீசுக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்நிலையில் கறம்பக்குடி தாலுகா மேலப்பட்ட மணிகண்டன் (34) என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 4 மொபட் 4 பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.