தென்காசியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது;
தென்காசி மாவட்ட பாஜக சார்பில் ஆலங்குளம் அருகே கீழப்பாவூர் கிழக்கு ஒன்றியம் பூலங்குளத்தில் ஸ்கை மேக்ஸ் மருத்துவமனை, ஸ்கை மேக்ஸ் இன்ஸ்டியூட் சார்பாக நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மத்திய அரசின் நலத்திட்ட முகாம்கள் 21 நாட்கள் கிராமங்கள் தோறும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக முதல் நிகழ்ச்சியாக இன்று இந்த முகாமை தென்காசி பாஜக மாவட்டத் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.