தென்காசி நகராட்சி பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது
நகராட்சி பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது;
தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் தற்போது கொசு உற்பத்தி அதிக அளவில் இருந்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் நகராட்சியிடம் புகார் தெரிவித்தனர். தகவலின்படி அனைத்து இடங்களிலும் கொசு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்ட நகராட்சி பணியாளர்கள். தென்காசி முக்கிய இடங்களில் பேருந்து நிலையம், வாய்க்கால் பாலம் அருகில் உள்ள இடங்களில் என பரவலாக அனைத்து இடங்களிலும் கொசு மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. இதற்கண்டா அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளை வெகுவாக பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.