ஊத்தங்கரை அருகே பயனற்று உள்ள வறுமை ஒழிப்பு சங்க கட்டிடம்; சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு.

ஊத்தங்கரை அருகே பயனற்று உள்ள வறுமை ஒழிப்பு சங்க கட்டிடம்; சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு.;

Update: 2025-04-13 11:37 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள வெங்கடதாம்பட்டி அடுத்த காந்தி நகரில் மகளிர் நலனை முன்னிட்டு கட்டப்பட்ட கிராம வறுமை ஒழிப்பு சங்கக் கட்டிடம் தற்போது பயன் இல்லாமல் உள்ளது. மேலும் அங்கு செடி, கொடிகள் வளரும் நிலையில், விஷ ஜந்துக்கள் சுற்றுகின்றன. இந்த கட்டத்தில் மீண்டும் மகளிர் கூட்டங்கள் நடத்த பயன்படுத்தப்பட்ட இந்த இடத்தை மீண்டும் சீரமைத்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்பாக உள்ளது.

Similar News