தண்ணீர் வற்றி வருவதால் குளம் போல் காட்சி அளிக்கும் ஓசூர் ராமநாயக்கன் ஏரி.
தண்ணீர் வற்றி வருவதால் குளம் போல் காட்சி அளிக்கும் ஓசூர் ராமநாயக்கன் ஏரி.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ராமநாயக்கன் ஏரி நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் குளமாக மாறியுள்ளது. கோடை காலம் துவங்கும் முன்பே ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. வரும் நாட்களில் ஒசூரில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் ஏரி ஆக்கிரமித்துள்ள ஆகாயதாமரை செடிகள், கால்வாய்களை தூர்வாரவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்களின் எதிர்பார்பாக உள்ளது.