பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
மரியாதை;

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில், செய்தி மக்கள் தொடர்பு துறை கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மணிமண்டபத்தில் அன்னாரது 95 ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் எஸ்.சங்கர் ஞாயிற்றுக்கிழமை மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, நகராட்சி தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார், நகராட்சி ஆணையர் கு.கனிராஜ், முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் பழனிவேல், வட்டாட்சியர் தர்மேந்திரா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.