பேராவூரணியில், திமுக இளைஞரணி சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா
தண்ணீர் பந்தல்;

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி கடைவீதியில் திமுக நகர இளைஞர் அணி சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து, பொதுமக்களுக்கு நீர்மோர், சர்பத், தர்பூசணி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை வழங்கினார். நிகழ்வில், திமுக பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், இளைஞர் அணி தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் ஆதி.ராஜேஷ் முன்னிலை வகித்தனர். இதில், நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், அயலக அணி அமைப்பாளர் ஷாஜகான், மருத்துவ அணி ராஜூ, இலக்கிய அணி ஆனந்தராஜ், இளைஞர் அணி நகர துணை அமைப்பாளர் மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நகர இளைஞரணி பிரவீன் ஆனந்த் செய்திருந்தார்.