சீவலப்பேரியில் வலம் வந்த அம்மன் சப்பரம்
சீவலப்பேரி ஸ்ரீ துர்காம்பிகா கோவில்;
தமிழ் புத்தாண்டு இன்று (ஏப்ரல் 14) கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு சீவலப்பேரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ துர்காம்பிகா கோவில் சப்பரம் சீவலப்பேரி பஜார் பகுதியில் வலம் வந்தது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தங்களது வீடுகள் முன்பு அம்மனுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.