காரைக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
காரைக்குடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்;
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தனியார் மஹாலில் நடைபெற்ற "சமத்துவ நாள்" விழாவில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று, அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் வழங்கினார். உடன் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி உட்பட பலர் பங்கேற்றனர்