இளைஞர் வெட்டிக்கொலை - உறவினர்கள் சாலை மறியல்
காளையார்கோவிலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்;
சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலில் இளைஞர் சரத்குமார் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம கும்பல் தாக்கியதில், அவர் உயிரிழந்தார். அவரது நண்பர் சிவசங்கர் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத் தொடர்ந்து, சரத்குமாரின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சுமார் 200 பேர் இன்று (ஏப்.14) காளையார்கோவில் காவல் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்