கூடைப்பந்து பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்ட கூடைப்பந்து பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது;

Update: 2025-04-14 12:22 GMT
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் கூடைப்பந்து விளையாட்டிற்கான "SDAT ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம், அமைக்கப்படவுள்ளது. சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கத்தில் இம்மையத்தில், 20 விளையாட்டு வீரர்கள், 20 வீராங்கணைகள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு ஒரு மாதத்தில் 25 நாட்கள் தொடர் பயிற்சி வழங்குவதோடு, சிற்றுண்டி, பயிற்சி உபகரணங்கள் மற்றும் விளையாட்டுச் சீருடைகளும் வழங்கப்படவுள்ளது. மேலும், இம்மையத்தில் கூடைப்பந்து பயிற்றுநராக பயிற்சி வழங்கிட கூடைப்பந்து விளையாட்டில், தேசிய விளையாட்டு நிறுவனம் (அ) இந்திய விளையாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட முதுநிலை விளையாட்டு பயிற்சி சான்றிதழ் அல்லது ஒரு வருட டிப்ளமோ/சான்றிதழ் பயிற்சி (10 மாதங்களுக்கு குறைவாக இருத்தல் கூடாது) அல்லது தமிழ்நாடு உடற்கல்வி பல்கலைக்கழகத்தில் முதுநிலை டிப்ளமோ (விளையாட்டு) அல்லது சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பால் நடத்தப்பட்ட உரிமம் படிப்பு (License Course) அல்லது நேதாஜி சுபாஷ் விளையாட்டு நிறுவனத்தால் நடத்தப்பட்ட 6 வார சான்றிதழ் படிப்பு படித்தவராக இருத்தல் வேண்டும். மேலும், தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு மாதாந்திர சம்பளமாக ரூ.25,000/- வழங்கப்படும். (11 மாதங்கள் செயல்திறன் அடிப்படையில் புதுப்பிக்கப்படும்) பயிற்றுநர் வயது வரம்பு 50க்குள் இருத்தல் வேண்டும். மேலும், பயிற்றுநருக்கான விண்ணப்பத்தை சிவகங்கை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். வருகின்ற 20.04.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பித்திடல் வேண்டும். தகுதி வாய்ந்த பயிற்றுநர் விண்ணப்பதாரர்களுக்கு, நேர்முகத்தேர்வு சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறும். உடற்தகுதி, விளையாட்டுத்திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்

Similar News